×

வங்கியில் 10 ஆயிரம் டாலர் போடுங்க… வெளிநாட்டு வாழ் மக்களுக்கு நேபாள அரசு திடீர் அழைப்பு: அன்னிய செலாவணியை அதிகரிக்க கையேந்துகிறது

காத்மாண்டு: நேபாளத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு வாழ் நேபாளிகள் வங்கிகளில் டாலர் கணக்கு துவங்க வருமாறு அந்தநாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இறக்குமதியை சார்ந்த நாடாகும். கொரோனா அலை பரவியபோது  சுற்றுலா வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது.  பெட்ரோலிய பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரையில் இறக்குமதி தொடர்ந்தது. இதனால் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 89 ஆயிரம் கோடியாக  இருந்த நேபாள அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரியில் ரூ.74 ஆயிரம் கோடியாக குறைந்தது. கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணியை கொண்டு இன்னும் 6 அல்லது மாதங்களுக்கு இறக்குமதி செய்யலாம் என அரசு கணித்துள்ளது. எனவே, அன்னிய செலாவணி கையிருப்பு கரைவதை தடுக்க, ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் நடவடிக்கையில் நேபாள மத்திய வங்கி இறங்கியுள்ளது. இதனால் இலங்கையை போன்று நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. பொருளாதாரத்தை காப்பாற்ற தவறியதாக நேபாள மத்திய வங்கி கவர்னர் மகா பிரசாத் அதிகாரி கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், காணொலி வாயிலாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜனார்தன் சர்மா, ‘‘வெளிநாட்டில் வசிக்கும் ஒரு லட்சம் நேபாளத்தினர் தலா 10 ஆயிரம் டாலர் வீதம் வங்கி கணக்கு திறந்தால், அன்னிய செலாவணி பிரச்னை தீரும். இதற்காக தனி கொள்கையை அரசு வகுத்துள்ளது. அதே போல் நேபாளத்துக்கு சுற்றுலா வருபவர்களுக்கு இலவச விசா வழங்குவது குறித்து  அரசு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.  …

The post வங்கியில் 10 ஆயிரம் டாலர் போடுங்க… வெளிநாட்டு வாழ் மக்களுக்கு நேபாள அரசு திடீர் அழைப்பு: அன்னிய செலாவணியை அதிகரிக்க கையேந்துகிறது appeared first on Dinakaran.

Tags : Nepal government ,KATHMANDU ,Nepal ,Dinakaran ,
× RELATED நேபாள துணை பிரதமர் உபேந்திரா ராஜினாமா